சீனாவுக்கு விற்பனை செய்யப்படும் கொழும்பு துறைமுகத்தின் நிலம்! சிறிலங்கா அரச தலைவருக்கு பறந்த அவசர கடிதம்
people
china
land
gotabaya rajapaksha
By Shalini
கொழும்பு துறைமுகத்தின் 13 ஏக்கர் காணியை சீன நிறுவனமொன்றிடம் கையளிக்க முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு துறைமுக ஒன்றிய தொழிற்சங்க அமைப்பு, ஜனாதிபதியைக் கோரியுள்ளது.
குறித்த இடத்தில் தெற்காசிய சேவைகள் விநியோக மத்திய நிலையம் எனும் பெயரை கொண்ட கூட்டு முதலீட்டு வேலைத் திட்டத்துக்காக சீன நிறுவனமொன்றுக்கு வழங்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ள துறைமுக ஒன்றிய தொழிற்சங்க அமைப்பு,
துறைமுக எதிர்கால அபிவிருத்தி உபாய மார்க்கங்களுக்கு தேவையான மிகவும் உணர்வுபூர்வமிக்க இடங்களிலுள்ள காணிகளை எக்காரணத்துக்காகவும் விற்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்கள்.