மீண்டும் மண்சரிவு அபாயம்: வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்!
மண்சரிவு அபாயம் காரணமாக ருவன்வெல்ல, ரத்தாகல பகுதி மற்றும் ஹட்டனில் உள்ள ரொசெல்ல மாணிக்கவத்த பிரதேசத்தில் உள்ள குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, ருவன்வெல்ல ரத்தாகல பகுதியில் உள்ள 11 குடும்பங்களை ரத்தாகல ஆரம்பப் பாடசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை
இதேவேளை, வட்டவல, ரொசெல்ல மாணிக்கவத்த பகுதியில் உள்ள 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேரை அப்பகுதியிலிருந்து வெளியேற்றி வெலிஓயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் தற்போது தொடர் மழை நிலைமை நிலவி வருவதால் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் நாட்களில் வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |