கணேமுல்ல சஞ்சீவ கொலை பாணியில் மற்றுமொரு சதித் திட்டம்!
பூஸ்ஸ அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான லொக்கு பெட்டீ என்பவரை கொலை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் பிஸ்டோல் வகையிலான துப்பாக்கியொன்று மற்றும் T56 வகையிலான 10 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
அஹுங்கல்ல காவல் பிரிவின் வெலிதர கல்வல பகுதியில் உள்ள வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவ்வாறு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொலைத் திட்டம்
பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் லொக்கு பெட்டீயின்ஆதரவுடன் துபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள கரந்தெனிய சுத்தாவின் மைத்துனரை கொலை செய்ததற்காக பழி வாங்கும் நோக்கில் லொக்கு பெட்டீ என்பவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் சந்தர்ப்பத்தில் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த கொலைக்கு பயன்படுத்துவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இவ்வாறு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்த நபர்களை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |