அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகள் நிறைவு! ஈரான் பகிரங்கம்
அமெரிக்காவுடனான சாத்தியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியப் பகுதிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.
"உரையின் முக்கியப் பகுதிகள் ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டுள்ளன," என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் கலந்துகொள்ளும் கையெழுத்திடும் விழா, வரும் வார இறுதியில் ஐரோப்பாவில் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஒப்புக்கொண்ட கமேனி
மேலும் அமெரிக்க ஜனாதிபதி , ஈரானுடனான போரில் அமெரிக்கா ஒரு சிறந்த தீர்வை எட்டியுள்ளது என்றும், அடுத்த சில நாட்களில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஆவணங்கள் இறுதி வடிவில் இருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் மிக விரைவாக நிறைவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டாரா என்று கேட்கப்பட்டதற்கு, ட்ரம்ப், ஆம் என்று பதில் வழங்கியுள்ளார்.
அத்தோடு சாத்தியமான இந்த ஒப்பந்தத்தை சற்று கருத்தியல் ரீதியானது என்று விவரித்த ட்ரம்ப், இது மிகவும் வலுவான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றும் கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்றும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |