கொத்மலையில் மீண்டும் மண்சரிவு அபாயம்! மூடப்பட்ட பிரதான வீதி
Nuwara Eliya
Central Province
By Dharu
நுவரெலியா கொத்மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கொத்மலை - கம்பளை பி431 பிரதான வீதி மூடப்பட்டுள்ளது.
காவல்துறை வெளியிட்ட தகவலின் படி இன்று காலை (14) முதல் தற்காலிகமாக குறித்த வீதி மூடப்பட்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக நிலச்சரிவால் பாதிக்கப்பட்டிருந்த பரகம்மன பகுதியில் உள்ள பிரதான வீதியில் மீண்டும் விரிசல்கள் தோன்றியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கொத்மலை காவல்துறை தெரிவித்துள்ளது.
மீண்டும் நிலச்சரிவு அபாயம்
இந்த நிலைமை, மீண்டும் நிலச்சரிவு அபாயம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீதி மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி