மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு - 26 வீடுகள் சேதம்
Landslide In Sri Lanka
Weather
By Kathirpriya
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 28 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெள்ளம் மற்றும் மண்சரிவால் 26 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், மண்சரிவால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதுமாத்திரமல்லாமல், மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மத்திய நேர செய்தி தொகுப்பில் காணுங்கள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்