பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு : 6 பேர் பலி 46 பேர் மாயம்
Philippines
By Sathangani
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 6போ் பலியாகியதுடன் 46பேரைக் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ள கிராமமொன்றில் கடந்த செவ்வாய் இரவு (06) நிலச்சரிவு ஏற்பட்டது.
இதன்போது காணாமல்போனவா்களில் 27 போ் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 பேருந்துகளில் அமா்ந்திருந்த சுரங்கத் தொழிலாளா்கள் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனா்.
மீட்பு பணிகளில்
அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவம், காவல்துறையினர் மற்றும் தன்னாா்வலா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு நிலச்சரிவில் காயமடைந்த 31 பேரை மீட்டனா்.

இந்நிலச்சரிவில் 300 குடும்பங்களைச் சேர்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாகோ நகரில் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த சுமார் 2 ஆயிரம் பேரை அங்கிருந்து அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி