எரிபொருள் விலை -லங்கா ஐஓசி நிறுவனம் எடுத்துள்ள முடிவு
Fuel Price In Sri Lanka
Sri Lankan Peoples
Lanka IOC
By Sumithiran
எரிபொருள் விலை குறைப்பு
லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று இரவு 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 92 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 450 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 540 ரூபாவாகும்.

இதேவேளை ஒட்டோ டீசலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 440 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 510 ரூபாவாகும்.
ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்றிரவு பத்து மணிமுதல் எரிபொருள் விலையை குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி