லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை மாற்றியமைத்தது
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்துள்ள நிலையில் லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலையை மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்றவாறு இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விலைகளில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது. இதற்கமைய, 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 348 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அதேபோல், ஒக்டேன் 95 லீற்றர் பெட்ரோல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.
இதேவேளை, ஒரு லீற்றர் டீசலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 306 ரூபாவாகும்.
சூப்பர் டீசலின் விலை லீற்றர் ஒன்றிற்கு 12 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.