உணவு பாதுகாப்பு தொடர்பில் இலங்கைக்கு உடனடி எச்சரிக்கை
சமீபத்திய 'டிட்வா' புயலைத் தொடர்ந்து இலங்கையில் உணவுப் பாதுகாப்பு நிலைமை மிக மோசமாகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.
1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது உணவுப் பாதுகாப்பற்ற அபாயப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
சுமார் 200 வீதிகள் மற்றும் 10 பாலங்கள் சேதமடைந்துள்ளதால், மரக்கறிகள், தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சந்தைக்கு வருவது குறைந்துள்ளது.
[LLLXKO2 ]
பொருளாதார மையங்கள்
15 முக்கியப் பொருளாதார மையங்கள் கட்டமைப்பு சேதத்தைச் சந்தித்துள்ளன. அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகள் வரையறுக்கப்பட்ட திறனில் இயங்குகின்றன.
மஹாபோகப் பருவம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 564,000 ஹெக்டேர் நெற்பயிர்கள் உட்பட 6.7 இலட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட வயல் மற்றும் காய்கறிப் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

கடுமையான பயிர் இழப்பு மற்றும் போக்குவரத்துத் தடைகள் காரணமாகக் காய்கறி விலைகள் 30% முதல் 200% வரை உயர்ந்துள்ளன. வெள்ளத்தால் கோழிப்பண்ணைகள், மீன் மற்றும் இறால் பண்ணைகள், மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சவால்கள் உணவு இருப்பைக் குறைத்துள்ளது, வீட்டுக் குடும்ப வருமானத்தைக் குறைத்துள்ளது.
மேலும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மனிதாபிமான உதவியைச் சார்ந்திருப்பதை அதிகரித்துள்ளதாகக் குறித்த அறிக்கை எச்சரிக்கிறது.
மேலும், விவசாய உள்ளீடுகளை மீட்டெடுத்தல், விநியோகப் பாதைகளைச் சீரமைத்தல் மற்றும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உற்பத்தியைத் தொடங்க உதவுவதன் மூலம் அடுத்த வாரங்களில் நிலைமை மேலும் மோசமடைவதை தடுக்க வேண்டும் என்றும் இந்த மதிப்பீடு வலியுறுத்துகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |