நண்பனை காப்பாற்றி தன்னுயிரை விட்ட இலங்கை தமிழ் இளைஞன் - வெளிநாடொன்றில் துயரம்
நீரில் விழுந்த தனது நண்பனை காப்பாற்ற முயன்ற இலங்கை தமிழ் இளைஞன் அதே நீரில் மூழ்கி பலியான துயர சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
படகுச்சவாரியில் ஈடுபட்ட வேளை
நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சிறப்பிக்க உதைபந்தாட்டம் மற்றும் படகுச்சவாரியில் ஈடுபட்ட வேளை தவறுதலாக பிரான்சில் இருந்து வந்தவர் நீரில் வீழ்ந்துள்ளார். அவரை காப்பாற்ற நீரில் இறங்கிய அனுசன் அவரை படகில் ஏற்றிவிட்டு அவர் தவறுதலாக நீரில் மூழ்கியுள்ளார்.
அவருடன் சென்ற நண்பர்கள் தேடிய போதும் அவரைக் காணவில்லை உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. மீட்புப் பணியாளர்கள் 90 நிமிடங்கள் தேடுதலின் பின்னர் அனுசன் கண்டெடுக்கப்பட்டார்.
உயிரை மீட்க போராடியும் தோல்வி
மீட்பு பணியாளர்கள் அவனது உயிரை மீட்க போராடியும் தோல்வியில் முடிந்தது . இவருடன் நீரில் மூழ்கிய மற்றவர் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் கூற்றின்படி காலநிலை அதிக வெப்பமாக உள்ளதால் நீரின் வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. .
