புதன் கிரகத்திற்குள் பெருந்தொகை வைரம் : ஆச்சரியமளிக்கும் தகவல்
China
NASA
Belgium
By Sumithiran
அதிக வெப்பம் மிகுந்த புதன் கிரகத்திற்குள் மிக அதிக அளவில் வைரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
புதன் கிரகத்தின் மேற்பரப்பில் காபன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பதாகவும், இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள்14 கி.மீ தடிமனில் இருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வைரத்தை வெட்டி எடுக்க சாத்தியம் இல்லை
ஆனால், புதன் கோளில் உள்ள வைரத்தை சுலபமாக வெட்டி எடுக்க சாத்தியம் இல்லை என்று 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' என்ற அறிவியல் இதழில் தகவல் வெளியாகியுள்ளது.
முதலாவது கிரகம்
சூரியனுக்கு மிக அருகில் புதன் இருப்பதால் அதிக வெப்பம் மிகுந்த கிரகமாக உள்ளதுடன் சூரியகுடும்பத்தின் முதலாவது கிரகம் புதன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்