இலங்கைக்கு வந்து குவியும் பெருமளவிலான டொலர்!
இலங்கையின் தற்போதைய வரி வருவாயின் இலக்குகள் நிலையான தன்மையில் எட்டப்பட்டுள்ளதாக நாளுக்கு நாள் அநுர அரசாங்கம் அடிக்கடி பதிவு செய்து வருகிறது.
குறிப்பாக அரச நிறுவனங்களில் பெரும்பாலான இலக்குகள் இந்த ஆண்டு முடிவுக்குள் பெறப்பட்டுள்ளதாக அடிக்கடி பதிவு செய்யப்படுகிறது.
கடந்த அரசாங்கங்களை காட்டிலும் வரிவருவாய் இலக்குகளை தற்போதைய அரசாங்கம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம், வாகன இறக்குமதிகள் மூலம் அதிகளவான டொலர்களும் இலங்கைக்குள் சேமிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
எனினும் இந்த வரி இலக்குகள் இலங்கை மக்களின் இயல்பு வால்க்கையில் அதிக தாக்கம் செலுத்துவதாக லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கொழும்பு பல்கலையின் பொருளியல் துறை பேராசிரியர் எம். கணேசமூர்த்தி கூறியுள்ளார்.
இலங்கையில் டொலரின் இருப்பு முன்பை விட தற்போது தக்கவைக்கப்பட்டுள்ளது. எனினும் வரி செலுத்துதல் மற்றும் வரி கோரல்கள் இலங்கை மக்களுக்கு பாதிப்பை உறுவாக்கியுள்ளதையும் அவர் விளக்கியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |