யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாரியளவு எரிபொருள் மீட்பு
யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலையொன்றில் பதுக்கி வைத்திருந்த பெருமளவு எரிபொருட்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையால் கைப்பற்றப்பட்டது.
இதன்போது 4700 லீற்றர் வரையிலான டீசல் 800 லீற்றர் பெட்ரோல்400 லீற்றர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பல்பொருள் அங்காடி களஞ்சியசாலையில் சோதனை
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொறுப்பதிகாரி பிறேமதிலகா தலைமையிலான குழுவினர் ஊரெழுவில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியின் களஞ்சியசாலையில் இன்று நடத்திய சோதனையின்போது பரல்களில் வைக்கப்பட்டிருந்த குறித்த பெருந்தொகையான எரிபொருட்களை மீட்டனர்.

நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
விசாரணைகளுக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட எரிபொருட்கள் மற்றும் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பர் என தெரிவிக்கப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |