யாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (21) இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அவரிடமிருந்து 2 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்தல்
பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே, நல்லூர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்