மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
மின்சாரக் கட்டண உயர்வு குறித்த முடிவை ஏப்ரல் 1 ஆம் திகதி பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலின் த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மின்சார விலை உயர்வு குறித்த முடிவு தற்போது பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கைகளில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சபையின் மதிப்பீடு
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மின்சார சபை மதிப்பீடு செய்து, பெப்ரவரி முதல் வாரத்தில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் மின்சாரக் கட்டணத்தில் 13 வீத உயர்வு கோரியுள்ளது.

அந்தக் மதிப்பீடுகள் செய்யப்பட்டபோது, இதுபோன்ற ஒரு உலகளாவிய சூழல் உருவாகியிருக்கவில்லை. தற்போது அந்தக் கோரிக்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 1 ஆம் திகதிக்குள் மின்சாரக் கட்டண உயர்வு குறித்த முடிவை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிக்கும்," என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |