ஏப்ரலில் தடையின்றி எரிபொருள் விநியோகம் : வெளியான அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தடைகளும் ஏற்படாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் இருப்பு மற்றும் இறக்குமதித் திட்டங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அடுத்த மாதம் முழுவதும் தடையின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மின்வெட்டை நடைமுறைப்படுத்த தேவையில்லை
மேலும், அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் சீராக வழங்கப்படுவதால், நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை எனவும் கூறினார்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிகரிக்கக்கூடிய எரிபொருள் தேவையைக் கருத்திற்கொண்டு மேலதிக கையிருப்புகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முறையான திட்டமிடல் காரணமாக, எரிபொருள் வரிசைகள் மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |