ஐபிசி தமிழ் யாழ் கலையகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickrematunge) 17ஆம் ஆண்டு நினைவேந்தல் ஐபிசி தமிழ் யாழ் கலையகத்தில் இன்று (08) இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வின் போது அவரின் ஆத்ம ஈடேற்றத்திற்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து லசந்த விக்ரமதுங்கவின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி நினைவுகூரப்பட்டது.
17 வருடங்கள் கடந்துள்ளது
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி இனந்தெரியாதோரினால் கொழும்பில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டு 17 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரது கொலைக்கான நீதி கிடைக்கவில்லை.
லசந்த விக்கிரமதுங்க மனித உரிமைகளுக்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்ததுடன் தமிழ் மக்களுக்கு எதிரான போர் குறித்து அழுத்தமான கருத்துக்களை வெளியிட்டு வந்தவராவார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |






தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 1 மணி நேரம் முன்