உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரோன் நுரையீரலை பாதிக்குமா? ஆய்வில் வெளிவந்த தகவல்
உலகை உலுக்கி வரும் கொரோனாவின் புதுவகை உருமாறிய ஒமிக்ரோன், டெல்டா வகை வைரஸ்களை விட அதிவேகமாகப் பரவக்கூடியது என்றாலும் நுரையீரலை சட்டென பாதித்து விடாது, மெதுவாகவே பாதிக்கும் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்டா வகை வைரஸ், டெல்டாவிலிருந்து உருமாறிய டெல்டா பிளஸ் வகைகள் முதலில் தொற்றுவதே நுரையீரலில்தான். அதனால்தான் பல்ஸ் ரேட் இறங்கி ஒக்சிஜன் அளவு கடுமையாக சரசரவென குறைந்து மரணம் ஏற்படுகிறது.
ஆனால் ஓமிக்ரோன் அப்படியல்ல மெதுவாகவே அது நுரையீரலைத் தாக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அடுத்த சில நாட்களில் மனிதர்களின் நுரையீரலை மிக மோசமாக பாதித்துவிடும். அந்த அளவோடு ஒப்பிடும்போது, 10 மடங்கு குறைவான பாதிப்பையே ஒமிக்ரோன் ஏற்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது.
ஹொங்கொங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எல்கேஎஸ் மருந்துத்துவத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒமிக்ரோன் வைரஸ் குறித்தும்,அதன் தீவிரத் தன்மை குறித்தும் ஆய்வு நடத்தி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.