வெளிநாடொன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் : கிடைக்கப்போகும் சிறைத்தண்டனை
கடந்த ஓகஸ்ட் மாதம் லத்வியா(Latvia)வின் எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.
சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஒன்றின் முன்பக்கத்திலும் சாரதி ஆசனத்திலும் இருந்த இரண்டு இலங்கையர்களுக்கு செல்லுபடியாகும் லத்விய வதிவிட விசா(visa) இருந்ததாகவும், பின்னால் இருந்த ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஆறு பேரிடம் சரியான ஆவணங்கள் இல்லை என்றும் எல்லைக் காவலர்கள் தெரிவித்தனர்.
மற்றுமொரு வாகனத்தில் இருந்து மூன்று இலங்கையர்களும்
இந்த குழுவுடன் சட்டவிரோதமாக எல்லைக்குள் பிரவேசித்தவர்களுக்கு உதவியாக வந்த மற்றுமொரு வாகனத்தில் இருந்து மூன்று இலங்கையர்களும் கைது செய்யப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
ஐந்து இலங்கையர்களுக்கும் இரண்டு முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறை
லத்வியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அழைத்து வர முயற்சித்த குற்றத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் இந்த ஐந்து இலங்கையர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து இலங்கையர்களுக்கும் இரண்டு முதல் எட்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் எல்லைக் காவலர்கள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |