திருகோணமலையில்"இராவணன் கோட்டம்" நூல் வெளியீடு
திருகோணமலை தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில், மூத்த எழுத்தாளர் திருமலை நவம் எழுதிய "இராவணன் கோட்டம்" என்ற கன்னியா தொடர்பான தொல்லியல் ஆய்வு நூலின் வெளியீட்டு விழா இன்று (31) சனிக்கிழமை காலை திருகோணமலை மாநகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தமிழ் சங்கத்தின் துணைத்தலைவர் கவிஞர் க. யோகானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், முதன்மை அழைப்பாளராக கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் நா. மணிவண்ணன் கலந்துகொண்டார்.
மேன்மை அழைப்பாளராக, பிரபல தொழிலதிபரும் ஐபிசி தமிழ் ஊடக குழும தலைவருமான பாஸ்கரன் கந்தையா கலந்துகொண்டு சிறப்பித்தார். விசேட அழைப்பாளராக பேராசிரியர் துரைமனோகரன், கௌரவ அழைப்பாளராக ஆசிரியர் எஸ்.ஆர். தனபாலசிங்கம் பங்கேற்றனர்.
திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பிரதம குரு வேதாகமமாமணி சோ. இரவிச்சந்திரக்குருக்கள், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிறிஸ்ரியன் நோயல் இமானுவேல் இருவரும் அருளுரை வழங்கினர்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் அ. அச்சுதன் வரவேற்புரை ஆற்றினார். நூல் அறிமுகத்தை சட்டத்தரணி உதயகுமார் பிரசாந்தினி, ஆய்வுரையை பேராசிரியர் வ. குணபாலசிங்கம் வழங்கினர்.
நூல் வெளியீட்டுரையை மகுடம் வி. மைக்கல் கொலின் நிகழ்த்தினார். தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திருமலை சி. காண்டீபன் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியைக் கல்யாணி நவரெட்ணம் தொகுத்து வழங்கினார்
திலீபனின் சிலையை நிறுவியதற்கும் எமது கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை: கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




