காணாமல் போன ரஷ்ய வெளியுறவு அமைச்சர்! பின்னணியில் புடினை ஆட்டிவைக்கும் மகள்
ரஷ்ய வெளியுறவு அமைச்சரான செர்கெய் லாவ்ரோவ் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, கிரெம்ளினில் பெரும் பதற்றம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு அவர் மாயமானதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இரண்டாவது மகள் கத்தரினா டிகோனோவாவிற்கு தொடர்புகள் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக ரஷ்யாவில் பல முக்கிய நபர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர்.
வெளியுறவு அமைச்சரின் மாயம்
சமீபத்தில் கூட போக்குவரத்துத் துறை அமைச்சர் ரோமன் ஸ்டரோவாய்ட் தன் காரின் அருகே உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
Image Credit: The Guardian
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற அணு ஆயுத சோதனை தொடர்பான முக்கிய கூட்டத்தில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் பங்கேற்கவில்லை.
அத்தோடு, தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் G20 மாநாட்டில் ரஷ்ய பிரதிநிதி குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மாயமானாரா அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
ரஷ்ய அரசியல் வட்டாரங்களின் தகவல்படி, புடினின் மகள் கத்தரினா கடந்த சில மாதங்களாக கிரெம்ளினில் செல்வாக்கை அதிகரித்து வருவதாகவும் லாவ்ரோவின் பதவியை கைப்பற்றும் நோக்கில் அவர் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
புடினின் அடுத்த வாரிசு
இவ்வாறானதொரு பின்னணியில், புடினின் முன்னாள் உரையாசிரியர் அப்பாஸ் கல்லியமோவ், கத்தரினா உக்ரைன் போர் விவகாரத்தில் லாவ்ரோவ் தவறாக செயல்படுவதாக புடினிடம் பலமுறை கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது புடின் தனது மகளின் கருத்துக்கு செவிசாய்த்திருக்கலாம் எனவும் அதுவே லாவ்ரோவின் காணாமற்போகும் சூழ்நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அப்பாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே புடின் தனக்கு பின் வாரிசாக கேத்தரினாவை முன்னிலைப்படுத்துவார் என்ற தகவல்கள் பரவிவரும் நிலையில், லாவ்ரோவின் மாயம் ரஷ்ய அரசியலில் புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |