காட்டாட்சி அணுகுமுறை : அமெரிக்காவை கடுமையாக சாடிய சீன ஜனாதிபதி
பாகிஸ்தானில் ஈரானுடன் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி, ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடுவதை அமெரிக்க படைகள் இலக்காக கொண்டு தயாராக உள்ளன. ஹோர்மூஸ் நீரிணையின் இரு புறங்களிலும் அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டு உள்ளன.
இதுபற்றி குறிப்பிட்ட சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஆபத்து நிறைந்தது. மற்றும் பொறுப்பற்றது என கூறினார். ஏற்கனவே பதற்றம் நிறைந்த பகுதியில் பதற்றம் அதிகரிப்புக்கான ஆபத்தும் உள்ளது என எச்சரித்து உள்ளார்.
காட்டாட்சி அணுகுமுறைக்கு உலகம் திரும்ப கூடாது.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ஜின்பிங், காட்டாட்சி அணுகுமுறைக்கு உலகம் திரும்ப கூடாது. உலக நாடுகள், பன்முக தன்மையை கடைப்பிடித்து, அமைதியையும், வளர்ச்சியையும் பாதுகாக்க கூட்டாக பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனால், சர்வதேச விதிகளை பாதுகாக்கும் நாடு என்ற அடிப்படையில் சீனா தன்னை அடையாளப்படுத்தி கொண்டது. இதேபோன்று, ஈரானுக்கு வான் பாதுகாப்பு ஆயுதங்களை வினியோகிக்கிறது என அமெரிக்கா தெரிவித்த குற்றச்சாட்டுகளையும் சீனா நிராகரித்து உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |