நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி கைது
மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசேஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சிலாபம் பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க ( Buddhika Manatunga) தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, கடந்த 2022 ஆம் ஆண்டில், குறித்த சட்டத்தரணி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டும் வகையில் மெசேஞ்சர் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக முறைப்பாடு அளித்திருந்தார்.
சந்தேக நபர் கைது
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பான விடயங்களை சட்டமா அதிபருக்கு அளித்துள்ளனர்.
இந்தநிலையில், சந்தேகநபர் செய்த நடவடிக்கைகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் வருவதாகவும், அவருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதோடு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
