யாழில் அதிகாலையிலேயே இடம்பெற்ற கோர விபத்து! இளைஞர்கள் இருவர் பலி
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் 22 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தானது, இன்று(05) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நவற்காடு பகுதியில் பருத்தித்துறை - யாழ்ப்பாணம் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது.
மேலதிக விசாரணை
விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞர்கள் நெல்லியடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, விபத்து தொடர்பாக கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 15 மணி நேரம் முன்