நீர்கொழும்பு பல்லசேன சிறையிலும் பதற்றம்! கற்களை வீசி எறியும் கைதிகள்
நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிறையிலுள்ள கைதிகள் சிறைக்கு வெளியே கற்களை வீசி எறிவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைதிகள் குழு ஒன்று கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையிலும் கலவரம்
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லன்சேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், நேற்று இரவு (06-08-2026) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து இன்று காலை முதல் (07-08-2026) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |