ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக விசாரணை! தலைமை நீதிபதிக்கு பறந்த கடிதம்
மே தினக் கூட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு குறித்தும், அந்த வழக்கின் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்தும் குறிப்பிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே அது குறித்த தகவல்களைப் பொதுவெளியில் பேசுவது நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தலைமை நீதிபதிக்கு கடிதம்
ஜனாதிபதியின் அந்தக் கருத்துக்கள் வெறும் பொதுவான அவதானிப்புகள் அல்ல என்றும், அதில் திகதிகள் மற்றும் காலக்கெடு தொடர்பான விபரங்கள் இடம்பெற்றுள்ளதால் இது மிகுந்த கவலைக்குரியது என்றும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு தலைமை நீதிபதிக்கு கடிதம் மூலம் அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்தச் சம்பவத்தை விமர்சித்துள்ளனர்.
ஜே.வி.பி மேடைகளில் இருந்தே இனி நீதிமன்றத் தீர்ப்புகள் அறிவிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், அதிகாரப் பகிர்வு மற்றும் நீதித்துறையின் தனித்துவத்தை மதிக்குமாறு ஜனாதிபதி அநுரவை வலியுறுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 16 மணி நேரம் முன்