பங்கர்களில் பதுங்கியுள்ள தலைவர்கள் - எதிர்க்கட்சி வெளியிட்ட தகவல்
SJB
Lakshman Kiriella
By Sumithiran
அரச தலைவர்கள் பங்கர்களில் பதுங்கி உள்ளதாக பிரதான எதிர்ச்சிக்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
69 இலட்சம் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மே தினக் கூட்டத்தைக்கூட ஏற்பாடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல எம்.பி தெரிவித்தார்.
தற்போதுள்ள மக்கள் ஆணையை கருத்திற்கொண்டு அரச தலைவர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சுபீட்சமான நாட்டை உருவாக்கப்போவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த மொட்டுக் கட்சி நாட்டை நாசம் செய்துள்ளது. தற்போது அரசாங்கத்தின் தலைவர்களுக்கு வெளியில் செல்ல முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.
பங்கர்களில் அரசாங்கத்தின் தலைவர்கள் பதுங்கியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி