அரசு நடத்தும் ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு வலியுறுத்தல்!
Sri Lanka Cabinet
Sri Lanka Government
By Kanna
அமைச்சர் வெளியிட்ட தகவல்
அனைத்து அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக ஊடக மற்றும் தகவல் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி வானொலி கூட்டுத்தாபனம், ரூபவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி கூட்டுத்தாபனம், லேக் ஹவுஸ் உள்ளிட்ட அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக உள்ளனர்.
சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் நிரோஷன் பிரேமரத்ன ஏற்கனவே தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
இதேவேளை, இன்னும் சில நாட்களில் சம்பந்தப்பட்ட பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி