ஆளும் தரப்பு எம்.பியின் வீட்டிலும் எரிவாயு சிலிண்டரில் கசிவு
leaked
gas cylinder
SB Dissanayake
By Sumithiran
தனது வீட்டிலும் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு எம்.பியான எஸ்.பி திஸநாயக்க(SB Dissanayake) குறிப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் எனது வீட்டிற்கு கொண்டு வந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது.சோப்பு நுரையை பயன்படுத்தியமை தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவரிடம் விளக்கம் கேட்டுள்ளேன்.
ஆனால், மனைவி மற்றும் வீட்டில் உள்ளவர்கள் ரிஸ்க் எடுக்க தயங்கியதால் எரிவாயு சிலிண்டர் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, சந்தையில் கிடைக்கும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை மீட்டு, அந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்வதே இப்போது செய்ய வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்