தரம் 05 புலமைப்பரிசில் சர்ச்சை: எழுந்துள்ள குற்றச்சாட்டு
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் கசிந்தமை தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் முழுமையடையவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன்படி, பிரச்சினை தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், முறைப்பாடுஅளித்த பெற்றோரிடம் முறையாக ஆதாரங்களை பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அறிவிப்பு
அத்துடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கும் வரை புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்க வேண்டாம் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் வினாக்கள் வெளியான விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு கல்வி அமைச்சு மற்றுமொரு குழுவினை நியமித்துள்ளது.
கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் கல்வியமைச்சர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |