வெளிநாடுகளில் உள்ள 42 இலங்கையர்களுக்கு சிவப்பு பிடியாணை
பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு, நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு இதுவரை 42 சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பில் புதிய காவல்துறை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிவப்பு அறிவிப்பு
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இந்த சிவப்பு அறிவிப்புகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சர்வதேச காவல்துறையினரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து ஹரக்கட்டா தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்துக்கு உதவியதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரியும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |