உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்! தீவிர தாக்குதலுக்கு தயாரான ரஷ்யாவின் எச்சரிக்கை
உக்ரைனியத் தலைநகர் கீவ் மீது புதிய திட்டமிட்ட தாக்குதல்களை தொடங்கப்போவதாக ரஷ்யா அச்சுறுத்தியுள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனியத் தலைநகர் கீவ் மீது தனது மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளமை ஐரோப்பிய நாடுகளை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய தாக்குதல்களில், நகரில் உள்ள ட்ரோன் உற்பத்தி ஆலைகளுடன், முடிவெடுக்கும் மையங்கள் மற்றும் கட்டளை மையங்களையும் குறிவைக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விரைவில் வெளியேறுங்கள்
வெளிநாட்டுப் பிரஜைகளும் தூதர்களும் கீவிலிருந்து முடிந்தவரை விரைவில் வெளியேற வேண்டும் என்று ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளதுடன், நிர்வாக மற்றும் இராணுவக் கட்டிடங்களிலிருந்து விலகி இருக்குமாறு குடிமக்களை எச்சரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு கீவ் மற்றும் பிற பகுதிகளில் ரஷ்யா நடத்திய பெரிய அளவிலான தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்டாரோபில்ஸ்க் நகரில் உள்ள மாணவர் விடுதி மீது கடந்த வெள்ளிக்கிழமை(23.05.2026) அன்று உக்ரைன் திட்டமிட்டு நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் துப்பாக்கித் தாக்குதலும், மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்ய ஆக்கிரமிப்பு
இந்தத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்தோடு ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில், ரஷ்யாவின் உயரடுக்கு இராணுவ ஆளில்லா விமானப் பிரிவு மீது தங்கள் படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், பொதுமக்களைத் தாக்கவில்லை என்றும் உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
அதன் பிறகு சிறிது நேரத்தில், கீவ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில், மூன்று குழந்தைகள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |