சூதாட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் உட்பட எட்டு பேர் அதிரடி கைது!
கரந்தெனிய, மஹாகொட, பஹலமானான பகுதியில் உள்ள ஒரு பெரிய சூதாட்டக் கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேரைக் கைது செய்துள்ளதாக கரந்தெனிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, காவல்துறையினர் அந்த சூதாட்டக் கூடத்தில் சோதனை நடத்தியபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டுப் பெண்கள், தாங்கள் வந்திருந்த எட்டு மோட்டார் சைக்கிள்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
நீதிமன்ற நடவடிக்கை
எட்டு மோட்டார் சைக்கிள்களின் சாவிகளையும் எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பி ஓடியதால், அவற்றை காவலில் எடுத்து காவல் நிலையத்திற்குக் கொண்டுவர பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சூதாடிய எட்டுப் பெண்களும் எல்பிட்டிய, உரகஹா, கரந்தெனிய போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபர்கள் எட்டு பேரும் பலபிட்டிய நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… 6 மணி நேரம் முன்