இஸ்ரேலுடனான போரை விரும்பவில்லை:லெபனான் அறிவிப்பு
இஸ்ரேலுடனான போரை லெபனான் விரும்பவில்லை என லெபனான் அமைச்சர் ஜியாத் மக்காரி தெரிவித்துள்ளார்.
கடந்த 18 நாட்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் ஹமாஸ் போரானது நாளாக நாளாக உக்கிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் ஒரு சில நாடுகள் இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவையும் ஒரு சில நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு தங்கள் ஆதரவையும் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் படைகள்
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் லெபனானும், தெற்கு பகுதியில் காசாவும் உள்ளன.
அண்மையில் ஹமாஸ் படைகள் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
அதனை தொடர்ந்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தான் ''லெபனான் இஸ்ரேலுடன் ஆயுத மோதலில் ஈடுபட விரும்பவில்லை'' என லெபனான் அமைச்சர் ஜியாத் மக்காரி தெரிவித்துள்ளார்.
நெதன்யாகு
மேலும் ''தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக நெதன்யாகு போரை விரும்புகிறார்'' எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டியை சந்தித்து , இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் இருந்து விலகி இருக்குமாறு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.