கோட்டாபயவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்: வலியுறுத்திய ஜோசப் ஸ்டாலின்
முன்னாள் அதிபர் கோட்டாபயவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலே இவ்வாறு குறிபிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, “கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாட்டிற்கு வந்துள்ளார். எனவே கோட்டாபய தொடர்பில் நீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
விசேடமாக மக்கள் முன்வந்து இதனை செய்ய வேண்டும்.
மக்களுக்கு சாப்பாடு இல்லை

மக்களுக்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு சாப்பாடு இல்லை. மக்கள் தொடர்பில் ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
பாண் ஒரு இறாத்தல் 300 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சரியான போஷாக்கு இல்லை.
அது மாத்திரமின்றி மாணவர்கள் தங்களது கல்வியை இழந்துள்ளனர். இவை அனைத்திற்கும் முக்கியமான காரணம் கோட்டாபய ராஜபக்ச தான்.
எனவே அவருக்கு எதிராக நீதியான விசாரணைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.