ஒன்பது வெளிநாட்டினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! வெளியான காரணம்
Sri Lanka Tourism
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய ஒன்பது வெளிநாட்டினர் மீது அஹங்கம காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா விசாவில் வந்த இந்த நபர்கள், கடந்த 22 ஆம் திகதி அஹங்கம காவல்துறையினர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் கவனம்
இந்த நிலையில், சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட வெளிநாட்டினர் நேற்றையதினம்(23) காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிற்கு வரும் வெளிநாட்டினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது குறித்து அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட விடயத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்