நுவரெலியாவில் பொழிந்த உறைபனி!
காலை வேளையில் நிலவிய குளிர் காலநிலை காரணமாக, நுவரெலியாவின் பல இடங்களில் இன்று (24) உறைபனி பொழிந்துள்ளது.
நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நுவரெலியா வானிலை ஆய்வு மையத்தில் இருந்து 7.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சாரதிகளுக்கு எச்சரிக்கை
இதற்கிடையில், மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளில் அடர்ந்த மூடுபனி இருப்பதால், போக்குவரத்துக்கு பெறும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூடுபனி நிலை குறிப்பாக ஹட்டன்-நுவரெலியா, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதிகள் மற்றும் ஏனைய குறுக்க வீதிகளிலும் பரவலாக காணப்படுவதாக தெரியவருகிறது.
இந்நிலையில், அந்த வீதிகளில் வாகனம் ஓட்டும்போது வாகன சாரதிகள் மெதுவாகவும் கவனமாகவும் வாகனம் ஓட்டுமாறு ஹட்டன் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |