எலுமிச்சை சாறு மட்டும் போதும் 14 நாட்களிலேயே உடல் எடையை குறைக்கலாம்
நம்மில் பலர் உடல் எடையை குறைக்க வேண்டுமென்று சொல்லி பல முயற்சிகளை எடுத்து கொண்டிருக்கின்றோம்.
இதனால் பல்வேறு உடல், உள ரீதியிலான அசௌகரியங்களுக்கும் ஆளாகி வருகின்றோம்.
உண்மையிலேயே எமது உடல் எடையை குறைக்க நாம் முதலில் செய்ய வேண்டியது எமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டியது ஆகும்.
அதற்கு எலுமிச்ச சாறு மிக ஏற்ற பொருளாக இருக்கும். எலுமிச்சை சாறினை தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு எடுத்துக் கொண்டால் இலகுவாகவே உடல் எடையை குறைத்துவிடலாமாம்.
மீண்டும் 10 நாட்களின் பின் மீண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்ய வேண்டும்.
14 நாட்களுக்கு எலுமிச்சை சாறினை எடுக்கும் முறைகள்,
நாள் 1
எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து கலந்து குடிக்கவும்.
நாள் 2
இரண்டு எலுமிச்சை பழங்களை பிழிந்து இரண்டு கப் தண்ணீரில் கலக்கவும்.
உங்கள் காலை உணவுக்கு முன் இந்த இரண்டு கப் எலுமிச்சை சாறையும் குடித்து முடித்து விட வேண்டும்.
வேண்டுமானால் சுவைக்காக தேன் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
நாள் 3
மூன்று எலுமிச்சை பழங்களின் சாறை பிழிந்து அதில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து, சிறிது தேன் சேர்க்கவும்.
இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடியுங்கள்.
நாள் 4
நான்கு எலுமிச்சை பழங்களைப் பிழிந்து அதனுடன் நான்கு கப் தண்ணீர் மற்றும் சிறிது தேன் கலந்து கொள்ளவும்.
இதை மூன்று வேளை சாப்பிடுவதற்கு முன்பாக குடிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை என காலையில் பாதி மற்றும் இரவு படுக்கைக்குச் செல்வதற்குமுன் இரண்டு முறை குடிக்கவும்.
நாள் 5
ஐந்து எலுமிச்சை பழங்களின் சாறை ஐந்து கப் தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து கலக்கவும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள்.
நாள் 6
ஆறு கப் தண்ணீரில் ஆறு எலுமிச்சம் பழத்தின் சாறைச் சேர்த்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கவும்.
இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கவும்.
நாள் 7
மூன்று எலுமிச்சை பழங்களைப் பிழிந்து, பத்து கப் தண்ணீரில் கலக்கவும்.
இதை மூன்று வேளை உணவுக்கு முன்பும் ஒவ்வொரு டம்ளர் குடிக்கவும்.
நாள் 8
ஆறு எலுமிச்சை பழத்தின் சாறினை பிழிந்து ஆறு கப் தண்ணீர் சேர்த்து கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நாள் முழுக்க குடித்து வர வேண்டும்.
நாள் 9
ஐந்து எலுமிச்சை பழங்களின் சாறை ஐந்து கப் தண்ணீரில் சேர்த்து, பின்னர் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நாள் முழுக்க தாகம் எடுக்கும்போதெல்லாம் குடிக்கலாம்.
நாள் 10
4 எலுமிச்சை பழத்தை எடுத்து சாறு பிழிந்து அதில் 4 கப் தண்ணீர் சேர்த்து பின் அதோடு 2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து ஒரு நாளில் மூன்று முறை குடியுங்கள்.
நாள் 11
மூன்று எலுமிச்சைப் பழங்களைச் சாறு பிழிந்து மூன்று கப் தண்ணீர் ஊற்றிக் கலக்குங்கள்.
அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள்.
நாள் 12
இரண்டு எலுமிச்சை பழத்தின் சாறினை எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பாக முழுவதையும் குடிக்க வேண்டும்.
நாள் 13
ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அதில் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிக்கலாம்.
நாள் 14
ஒரு எலுமிச்சையின் சாறினை எடுத்து அதோடு ஒரு நெல்லிக்காயும் சேர்த்து ஒரு சிட்டிகை சீரகம், ஒரு சிட்டிகை உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்
