சமூக விடுதலைக்காக வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை பயன்படுத்துவோம்: பாரத் அருள்சாமி
மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமெனில் எமது மக்களின் ஒரே தெரிவு சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவாகவே (Ranil Wickremesinghe) என இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி (Bharat Arulsamy) தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உரையாற்றிய பாரத் அருள்சாமி,பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை மற்றும் வீட்டுரிமை பெற்றுக்கொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
போலி பிரசாரம்
அதன்மூலம் பலர் தற்போது நன்மை பெறுகின்றனர். தமக்கு சேவை செய்யக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர்.
ஏனெனில் நெருக்கடியின் போது ஏனையோர்போல் ஓடி ஒளியாது, அவரே முன்வந்து நாட்டை பொறுப்பேற்று வழிநடத்தினார். எனவே, எதிரணிகள் தனிப்படை அமைத்து எவ்வாறுதான் போலி பிரசாரம் முன்னெடுத்தாலும் அவற்றை நம்புவதற்கு மக்கள் தயாரில்லை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதியாகியுள்ளது. நாட்டில் மலையக மக்கள் வாழும் பகுதிகளிலெல்லாம் இ.தொ.காவின் பேராதரவுடன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதி வெற்றிபெறுவார் என தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, இ.தொ.காவின் பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து, மாவட்ட தலைவர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களும் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |