ரஷ்யாவிற்கு பாடம் புகட்டுவோம் - பைடன் சூளுரை
பைடன் கடும் கண்டனம்
உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ரஷ்யாவிற்கு பாடம் புகட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர். உக்ரைன் மக்கள் மீது புடின் நடத்தும் சட்ட விரோதப் போரின் முழுமையான மிருகத்தனம், மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மக்களுக்கு அமெரிக்கா நீண்ட காலம் ஆதரவு தர வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாட்டை, ரஷ்யாவின் இந்த தாக்குதல்கள் வலுப்படுத்துகிறது.
ரஷ்யாவிற்கு பாடம் புகட்டுவோம்

எங்களது கூட்டாளிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷ்யாவிற்கு நாங்கள் தொடர்ந்து பாடம் புகட்டுவோம். போர்க்குற்றங்களுக்கு புடின் மற்றும் ரஷ்யாவை பொறுப்பு ஏற்க வைப்போம். உக்ரைன் இராணுவம் தங்கள் நாட்டையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க தேவையான ஆதரவை வழங்குவோம். இவ்வாறு பைடன் குறிப்பிட்டுள்ளார்.