தமிழர்கள் தொடர்பில் முறையிட கனடா தூதரகத்திற்கு சென்ற குருந்தி விகாரை தேரர்
முல்லைத்தீவு குருந்தி ஆலய பிரதம சங்கநாயகம் வணக்கத்திற்குரிய கல்கமுவ சாந்தபோதி தேரர் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இன்றையதினம் (20) நேரடியாக சென்று கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.
அதாவது இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் நேற்றைய தினம் முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இனவாதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் ஊடாக தூதுவரை தவறாக வழிநடத்தியதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு சென்ற கனடா உயர் ஸ்தானிகர்

இதேவேளை,நேற்றையதினம் முல்லைத்தீவிற்கு சென்ற கனடா உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இம்மாதம் 14ஆம் திகதி, வெள்ளிக்கிழமையன்று தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்ட விடயம் தொடர்பிலும், அங்கு வழிபாடுகளுக்கென சென்ற தமிழ்மக்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருந்தமை தொடர்பிலும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.