நாட்டை உலுக்கிய பெண் வைத்தியர் வன்கொடுமை : பிரதமருக்கு பறந்த கடிதம்

Anuradhapura Sri Lanka Harini Amarasuriya
By Harrish Mar 15, 2025 03:42 PM GMT
Report

அநுராதபுரத்தில் பெண் வைத்தியருக்கு நடந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து மன்னார் பெண்கள் வலை அமைப்பு பிரதமருக்கு எழுத்து மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் (Anuradhapura Teaching Hospital) பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சம்பவத்தை அடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி மன்னார் பெண்கள் வலை அமைப்பினால் இன்று(15) பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு (Harini Amarasuriya) கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

முடிவை மாற்றியதா அரசாங்கம்! பிரதமருக்கு எதிராகவே எதிரொலி

முடிவை மாற்றியதா அரசாங்கம்! பிரதமருக்கு எதிராகவே எதிரொலி

துயர் சம்பவம்

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, “மதிப்பிற்குரிய இலங்கை வாழ் குடிமக்களுக்கும், ஊடகத்துறையில் கூடியிருக்கும் பெண்கள், ஆண்களுக்கும் மற்றும் பிரதமர் அவர்களுக்கும்,

இன்று நாங்கள் அனைவரும் துயரமான இதயங்களுடன் உங்கள் முன், இலங்கை முழுவதையும் உலுக்கிய சம்பவம் தொடர்பாக எடுத்துரைப்பதற்கு ஒன்று கூடியுள்ளோம்.

நாட்டை உலுக்கிய பெண் வைத்தியர் வன்கொடுமை : பிரதமருக்கு பறந்த கடிதம் | Letter To Pm Regarding Lady Doctor Case

அநுராதபுரத்தில் பணியாற்றும் பெண் வைத்தியருக்கு, இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவச்சிப்பாயால் கத்தி முனையில் இழைக்கப்பட்ட உடல் ரீதியான வன்புணர்வு என்பது, ஒரு தனிமனிதன் மீதான வன்முறையல்ல, மாறாக இது இலங்கையில் வாழுகின்ற ஓட்டு மொத்தப்பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு, நம்பிக்கை மீது இழைக்கப்பட்ட குற்றச்செயலாகும்.

இந்தக்கொடூரமான வன்செயல் பெண்கள் நலிந்த நிலையில் உள்ளார்கள் என்பதை எழுத்துரைக்கின்றது.

அத்துடன் இது சாதாரண பெண்களுக்கு மட்டுமல்ல, தங்களது வாழ்க்கையை ஏனையவர்களின் உயிர்களைக்காப்பாற்ற தங்களை அர்ப்பணித்த வைத்தியமாது மீதும் நடந்தேறியுள்ளது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

பாரதூரமான குற்றச்செயல்

மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே பெண்களாகிய நாங்கள் வலிமையான மற்றும் உடனடியான மேன்முறையீட்டை தங்களுக்கு முன்வைக்கின்றோம்.

இந்தப் பாரதூரமான குற்றச்செயலைப் புரிந்த கொடும்பாவி சட்டத்தின் கீழ் மிகவும் கொடூரமான முறையிலும், தண்டிக்கப்படவேண்டும்.

நாட்டை உலுக்கிய பெண் வைத்தியர் வன்கொடுமை : பிரதமருக்கு பறந்த கடிதம் | Letter To Pm Regarding Lady Doctor Case

இந்த சம்பவத்திற்கான நீதி உடனடியாகவும் கடுமையாகவும் எவ்வித காலதாமதமின்றியும், எதுவித இணக்கப்பாடுகளுமின்றியும் வழங்கப்படவேண்டும். இது ஒரு சம்பவம் தொடர்பானதல்ல.

மாறாக இதன் முலம் ஒரு தெளிவான கருத்து முன்வைக்கப்படவேண்டும். அதாவது இலங்கையில் இவ்விதமான பாரதூரமான செயல்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் எவ்விதத்திலும் பொறுத்துக் கொள்ளப்படமாட்டாது என்பதாகும்.

பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் நீதி முதன்மைப்படுத்தப்பட வேண்டும். சட்டநடைமுறைகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

வரலாற்றில் முதல் முறையாக தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்

வரலாற்றில் முதல் முறையாக தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்

சர்வதேச மகளிர் தினம்

இதில் ஆறாத்துயரமாக அமைவது மார்ச் மாதம் உலகளாவிய ரீதியில் அனைத்துப் பெண்களையும் மேன்மைப்படுத்தவும் பாராட்டவும் அவர்களது சேவைகளுக்காக நன்றியைச் செலுத்தவும் என்பதுடன், மார்ச் மாதம் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக அனுஸ்டிக்கப்பட்டும் வருகின்றது.

சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்பட்டு இருதினங்கள் கடந்த நிலையில் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடைபெற்றது மிகுந்த வேதனையளிக்கின்றது. மேலும், இந்த சம்பவம் மார்ச் மாதத்தின் கொண்டாட்டங்களில் ஒரு காரிருளைப் படரச்செய்துள்ளது.

நாட்டை உலுக்கிய பெண் வைத்தியர் வன்கொடுமை : பிரதமருக்கு பறந்த கடிதம் | Letter To Pm Regarding Lady Doctor Case

நாடளாவிய ரீதியில் பெண்களின் மனதில் கடும் கோபத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

உண்மையில் சொல்லப்போனால் பெண்கள் மார்ச் மாதத்தில் மட்டுமல்ல மாறாக அவர்களது வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் மதிக்கப்படவும் கொண்டாடப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டியவர்கள்.

இந்த துயரகரமான சம்பவம். பெண்களாகிய நாங்கள், சமஉரிமைக்காகவும் நீதிக்காகவும் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியள்ளதென்பதை உணர்த்துகின்றது.

ஏப்ரலில் இலங்கை வரும் இந்திய பிரதமர் : வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஏப்ரலில் இலங்கை வரும் இந்திய பிரதமர் : வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

முன்வைக்கப்பட்ட கோரிக்கை

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயம், இந்தச் குற்றச்செயலில் ஈடுபட்டநபர் இராணுவத்திலிருந்து தப்பியோடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமகாலங்களில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களை உற்று நோக்குகின்றபோது காணக்கூடியது யாதெனில் இவ்வாறாக இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர்கள் சமுகங்களில் இழைக்கப்படுகின்ற குற்றச்செயல்களில் பெரும்பங்கினை வகிக்கின்றனர்.

நாட்டை உலுக்கிய பெண் வைத்தியர் வன்கொடுமை : பிரதமருக்கு பறந்த கடிதம் | Letter To Pm Regarding Lady Doctor Case

இந்த இழிவான செயல்கள் ஆயுதம் தாங்கி பாதுகாப்பில் ஈடுபடுகின்றவர்களின் பொறுப்புடைமையையும் ஒழுக்கத்தையும் கேள்விக்குறியாக்குகிறது. 

இந்நிலையில், அந்த பாதுகாப்புத்துறையில் பணிபுரியும் தனிநபர்கள் இவ்வாறான கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடும்போது இலங்கையில் வாழ்கின்ற மக்கள் எவ்வாறு பாதுகாப்புத்துறையின் மீது நம்பிக்கை கொள்ளமுடியும்?

இலங்கை அரசாங்கம் இந்த தப்பியோடிய இராணுத்தினர் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் இவ்வாறான குற்றச்செயல்கள் நடைபெறுவதை முற்றாகத் தவிர்க்கவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம் என குறித்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவரை போட்டுத் தள்ளிய அமெரிக்கா...! உறுதிப்படுத்திய ட்ரம்ப்

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவரை போட்டுத் தள்ளிய அமெரிக்கா...! உறுதிப்படுத்திய ட்ரம்ப்

you may like this


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025