சிறிலங்கன் எயார் லைன்ஸில் 09 அதிகாரிகளுக்கு கொழுத்த சம்பளம் - அதிபர் ரணிலுக்கு சென்றது கடிதம்

SriLankan Airlines Nimal Siripala De Silva Ranil Wickremesinghe
By Jaso Jan 26, 2023 12:39 AM GMT
Report

அரச நிறுவனங்களில் பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு என்பன நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த வருடத்தில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாக சபையினால் ஒன்பது அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு 3 கோடி ரூபாய்க்கும் மேல் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக விமான நிறுவன தொழிற்சங்கம் அதிபர் ரணிலுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தையும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துஅமைச்சையும் சிறிலங்கா எயார்லைன்ஸ் நிர்வாக சபைதவறாக வழிநடத்தியுள்ளதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சட்டவிதிகள் மீறல்

சிறிலங்கன் எயார் லைன்ஸில் 09 அதிகாரிகளுக்கு கொழுத்த சம்பளம் - அதிபர் ரணிலுக்கு சென்றது கடிதம் | Letter To Ranil Regarding Srilankan Air Lines

பதவி உயர்வு வழங்கப்பட்ட போதும் 9 அதிகாரிகளுக்கும் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்று சிறிலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகள் அமைச்சுக்கு அறிவித்துள்ள போதிலும்,அவர்களுக்கு மாதாந்தம் ஏறக்குறைய 30 இலட்சம் ரூபாய் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த 9 அதிகாரிகளின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்காமல் பதவி உயர்வுகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்துள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாக சபை, அரசாங்கத்தின் சட்டவிதிகளை மீறியுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

 நிமல் சிறிபால டி சில்வாவிடம் கோரிக்கை விடுத்தும் பயனில்லை

சிறிலங்கன் எயார் லைன்ஸில் 09 அதிகாரிகளுக்கு கொழுத்த சம்பளம் - அதிபர் ரணிலுக்கு சென்றது கடிதம் | Letter To Ranil Regarding Srilankan Air Lines

பதவி உயர்வுகள் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்புகள் குறித்து விசாரணை நடத்தி நிர்வாக சபை செய்த தவறை சரி செய்யுமாறு துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் தொழிற்சங்கம் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தபோதும் விசாரணை நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

எனவே, துரித கதியில் விசாரணை நடத்தி நிர்வாக சபையின் நடவடிக்கை சரிசெய்யப்பட வேண்டும் என்று தொழிற்சங்கத்தால் அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016