தலைகீழாக மாறிய அரசு முறைப் பயணம்: விமான விபத்தில் லிபிய இராணுவத் தளபதி உள்ளிட்ட 7 பேர் பலி
துருக்கியில் விமான விபத்தில் சிக்கி லிபியா இராணுவத் தளபதி உயிரிழந்துள்ளார்.
அத்தோடு விபத்தில் அவர் உட்பட ஏழு பேர் மேலும் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட ஆப்ரிக்க நாடான லிபியாவின் முக்கிய இராணுவ படைத்தளபதியான முகமது அலி அகமது அல் ஹதாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கட்டுப்பாட்டு அறை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேற்காசிய நாடான துருக்கிக்கு அரசு முறைப் பயணமொன்றை படைத்தளபதி மேற்கொண்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் உயர்மட்ட பாதுகாப்பு பேச்சுக்காக சென்ற அவர், நான்கு உயர் அதிகாரிகள் மற்றும் மூன்று பணியாளர்களுடன் தனியார் ஜெட் விமானத்தில் நாடு திரும்பியுள்ளார்.
இந்தநிலையில், தலைநகர் அங்காராவின் எசென்போகா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், 40 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.
விமானம் விபத்து
இதையடுத்து, ஹேமானா என்ற இடத்தில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானிகள், விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்துள்ளனர்.

இருப்பினும், அந்த முயற்சி தோல்வியடைந்ததில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில் இராணுவத் தளபதி முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட விமானத்தில் இருந்த ஏ) பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழநதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |