உயிர்காக்கும் பயிற்சியில் ஈடுபட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரியின் உயிர் பறிபோனது
Sri Lanka Navy
Death
By Sumithiran
ஹிக்கடுவ கடற்கரையில் உயிர்காக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் நேற்று(15) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
வத்தளை, டிகோவிட்ட கடற்படை முகாமில் பணிபுரியும் 32 வயதான தொடன்துவா பகுதியைச் சேர்ந்த கடற்படை அதிகாரி ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதி

பலபிட்டிய கடற்படை பயிற்சிப் பாடசாலையானது 30 கடற்படை அதிகாரிகளுக்கான உயிர்காக்கும் பயிற்சி நெறியை ஹிக்கடுவ பன்னம்கொட பகுதி கடற்கரையில் நடாத்தியுள்ளதுடன், உயிரிழந்தவரும் இதில் பங்குபற்றியுள்ளார்.
இந்த அதிகாரி அங்கு நீரில் மூழ்கிய நிலையில், மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்