மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்ததில் வீட்டு உபகரணங்கள் சிதைவு!
அம்பாறை இகினியகல காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் கனமழையின் போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து நேற்று (31.07.2026) நடைபெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தால் எரிந்த வீடு
குடும்பத்தின் தந்தை கொழும்புக்குச் சென்றிருந்த நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், வீட்டிலிருந்த இரண்டு பிள்ளைகள் மழை தொடங்கியதும் அருகிலுள்ள வீட்டுக்குச் சென்றிருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து வீட்டின் உள்ளே தீ வேகமாகப் பரவியுள்ளது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்
ஆனாலும் வீட்டிலிருந்த அனைத்து பொருட்கள் மற்றும் உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இகினியகல காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |