இன்று 21 மாவட்டங்களுக்குக் கடுமையான மின்னல் எச்சரிக்கை
பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (14) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு காலை 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மின்னல் தாக்கத்துக்கான அதிக அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
குறித்த பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 1 நாள் முன்