வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
Department of Meteorology
Weather
Lightning Alert
By Sindu
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடுமையான மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதால், வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (29) காலை 11.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இந்த எச்சரிக்கையின்படி, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு,அம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பலத்த காற்றும் வீசக்கூடும்
இடியுடன் கூடிய மழையின் போது, குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |