வருட இறுதியில் அதிகரிக்கப்போகும் மதுபான நிலையங்கள்
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 37 புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை கலால் திணைக்களம் வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya)தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவின்(Jayantha Samaraweera)கேள்விக்கு பதிலளித்த அவர்,
பல்பொருள் அங்காடிகளுக்கு 16 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில் 214 மதுபான உரிமங்கள்
2023 ஆம் ஆண்டில் 214 மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 147 சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 474 மதுபான உரிமங்களை மக்கள் தொகை விகிதத்தைப் பொறுத்து வழங்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், மக்கள் தொகைக்கு ஏற்ப மதுபான அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுவதாகவும், 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் சுமார் 1,578 மதுபான உரிமங்கள் இருக்க வேண்டும் எனவும், எனவே மேலும் 474 உரிமங்களை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறைவடைந்த மதுபாவனை
கடந்த 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டளவில் மது பாவனை 19 வீதத்தால் குறைந்துள்ளதாகவும், அந்த காலப்பகுதியில் மதுபான உற்பத்தி 8.2 மில்லியன் லீற்றரால் குறைந்துள்ளதாகவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,180 ஆண்டுகளில் 2023 ஆம் ஆண்டில் போத்தல்களின் உற்பத்தி 14.5 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |